Monday, July 11, 2011

கல்வி ஊரின் திருவிழா

கல்வி ஊரின் திருவிழா

சுட்டெரிக்கும் சூரியனின் சுடர்களுக்கு மத்தியிலும் காலை மாலை வேலையென
சக்கரமாக சுழன்று கொண்டு இருக்கும் எமக்கு
களியூட்டுவதற்காகவும் சிறு இளைப்பாறுதாலுக்காகவும்
ஒரு திருவிழா ஐீலை 16ல்  காத்திருக்கின்றது. 
அனைவரும் ஒன்று சேருவோம்.

மைதான கிணற்றிலும், வீட்டு திண்ணைகளிலும், அரசமர நிழலும்
கூடி கதை பேசி மகிழ்ந்த நாம் மேப்பிள் மரத்தின் கீழ் அமர்ந்து
மீண்டும் பழைய நினைவுகளை மீட்போம் வாரீர்.

உண்ண உணவும் உண்டு. உறவாட உறவுகளும் உண்டு. 
எம் செல்ல குழந்தைகள் துள்ளி விளையாட
பல்வகை விளையாட்டுக்கள் உண்டு. 
நம் முதியோருக்கும் பல விளையாட்டுக்களும்
காத்திருக்கின்றன. 

பெற்றோருக்கு ஓரு தாய் மண். பிள்ளைகளுக்கோ
இன்னொரு தாய் மண் என்று வாழும் இந்நாட்டில்
நம் பிள்ளைகளுக்கு ஊரையும் உறவையும் அறிமுகபடுத்துவோம்.
அழைத்து வாருங்கள் அடுத்த சந்ததியினாருக்கு
நம் இனத்தின் பெருமைகளை எடுத்துரைப்போம். 

தயக்கம் என்ன இளையோரோ?
எம் கருத்து இங்கு எற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கமா? 
வந்து பாருங்கள்.  உம்மை தட்டிக் கொடுக்க எத்தனை கரங்கள்.
எம் மூத்தோர் எம் ஊரையையும் எமது கலாச்சாரத்தையும்
கட்டிக் காக்க பட்ட அல்லல்கள் போதும்.இனியாவது
இளையோர்  நாம் கை கொடுப்போம் வாரீர்.
புறப்பட்டு வாரீர் நண்பர்களே!
ஊர் மக்களுடன் ஒன்றாக கூடி களித்திருப்போம் வாரீர்.

Friday, July 8, 2011

கல்வியங்காட்டு ஒன்றுகூடல்


கல்வியங்காட்டு மக்களின்
ஒன்றுகூடல்
கனடா மண்ணில் புதுப்பொலிவுடன்
ஆடி மாதம் 16ந் திகதி
அசைந்துவருகுது வாருங்கள்
எம்மூர்மக்களே
ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம்
ஆடி16ல் அனைவரும் ஒரேதிடலில்
கூடி நின்று
கும்மியடித்து கொண்டாடுவோம்
வாருங்கள் வாருங்கள்
எம்மண்ணின் வாசனையை
மனதில் நிறுத்துவோம்

                   மண்ணின்மைந்தன்
                               மதி

Friday, May 13, 2011

பணத்தை மதிப்பவன்

பணத்தை மதிப்பவன்



 
பணத்தை மதிப்பவன்
பாசத்தை மதிப்பதில்லை
மதிகெட்ட மனிதனுக்கு
பணவெறி ஏந்தானோ?????

காசை என்னும்_கயவர்கூட்டம்
காரணம் தெரியாது
கதிகலங்கி_நிற்குது...
கல்லை வைத்துபால்_வார்க்கும்

கல்நெஞ்சம்  கொண்டவரே
கருணை கொண்டு
கண்ணீரோடு வாழும்
பச்சிளம் குழந்தைகளை
பாரினிலே நீர் அரவணைத்தாள்

பணத்திலும் பார்க்க
பால்வார்க்கும் கல்லிலும்_ பார்க்க
பாசத்தின் உண்மை_நிலை
உமக்கு விளங்கும் _அப்போது
என்றுசொல்லுவது

_உங்களது மதி

Sunday, May 1, 2011

எங்கள் வீரபத்திரர்



கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள் _ வீரபத்திரர்
எல்லா நலமும் தந்திடுவாய்
என்றும் எங்களை_ காத்திடுவாய்


கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள்_ வீரபத்திரர்
பொறாமை தன்னை போக்கிடுவாய்
அன்பை என்றும் _வழத்திடய்யா


அடிமை வாழ்வை _அழித்திடய்யா
அயராது எங்களை _காத்திடய்யா
கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள் _வீரபத்திரர்


கொடிய நோய்கள _போக்கிடய்யா
கோபம் எம்மேல்- வேண்டாமய்யா
ஊரும் உறவும் _வாழ்வதற்கு
உந்தன் திருவடி _சரணமய்யா


கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள்_வீரபத்திரர்
கல்வியறிவை தந்திடய்யா
காலம் எல்லாம் _வாழ்வதற்கு


தொண்டு செய்வது _நம்கடமை
நாளும் பொழுதும் காப்பது_உன்கடமை
கல்வியூரின் பதியினிலே
காக்கும் எங்கள் வீரபத்திரர்


என்றும் எங்களை _காத்திடுவாய்
எல்லா நலமும் _தந்திடுவாய்
மதி கனடா

Friday, April 22, 2011

எங்கடை ஜீ பி ஸ் இது

எங்கடை ஜீ பி ஸ் இது


எங்கடை ஜீ பி ஸ்
அரச மர நிழலில் அமைந்த
எங்கள் ஜீ பி ஸ்
களைத்துபோய் வருவோர்
ஆர அமர்ந்து _களைப்புப்பொக்க
இடம் கொடுப்பதும் எங்கள்_ஜீ பி ஸ்

உலகத்து புதினத்தை
எல்லோரும் அறிவதற்கு
பத்திரிகை வாயிலாக
அனைவரும் படித்தறிவதற்கு
வழி அமைத்ததும்
எங்கள் ஜீ பீ ஸ்

புலம் பெயர்ந்து _வந்தும்
இன்று வரை_ உன்னை
மறவாமல் இருக்கும் _ நாங்கள்
உந்தனது மைந்தர்கள் _ஜீ பி ஸ்
உன் பணி தொடரட்டும்
எம் உறவுகள் _உன்மடியில்
களைப்பாறட்டும் என்று _உன்னைவாழ்த்தும்

உந்தனது மைந்தன்
கனடா மதி

Monday, March 28, 2011

கவிதை - கனடா மதி

இவனுக்கு உள்ள மனம்
இவனுக்கு உள்ள மனம்
எம் இனத்துக்கு இல்லை
என்பதை நினைத்தால் என்
நெஞ்சு வெடிக்குது_ எம் இனமே
நீங்களும் இவன் போல
...வாழ நினையுங்கள்_ வாழ்வில்
நீங்களும் வளம் பெறலாம் _

இதை சொல்லுவது
உங்கள் மதி
_________________________________________________________

வாழும் நாள் வரை உன் நினைவுடன்

கண்மணி உன் வீட்டு முற்றத்துதில்
உள்ள துளசியின் மாடத்தில் _தெரிந்தது உன்முகம்
நான் வந்து பார்த்தபோது உன் முகம் காணாது
தவியாய் தவித்தேன்_ஏன் இந்தக்கோபம்
என் மேல் உனக்கு_ வருங்காலம்
...பதில் சொல்லும்_எங்களின் காதல் உயிர் உள்ளது_என்று
காதல் என்பது என்றும் அழியாது
காலம் உள்ளவரை எங்கள்_காதல்வாழும்
என்றென்றும் காத்திருப்போம்_நம் காதலுக்காக????
_____________________________________________________________

காலம் உள்ளவரை காதல்...!

கவி எழுதி ஒய்ந்த என் கை
காரணம் தெரியாது_ தவிக்கிறது
மனித வாழ்வில் இது ஒன்றும்
புதிது அல்ல
காலம் உள்ளவரை காதலுக்காக
வாழும் மனிதன்
கண்ணீரோடு வாழ்ந்தாலும் என்றும்
காதலை நினைத்து வாழ்ந்தாள்
கடைசி நிமிடம் வரை அவள்முகம்
என் இதயத்தில் இருக்க
காலனிடம் வைப்பேன் விண்ணப்பம்
என் உயிர் உன்னிடம் வராலாம்
ஆனால் அவள் என்றும் எனக்காக
என் அருகில் இருப்பாள் _என்றால்????????????????
கனடா மதி