Monday, July 11, 2011

கல்வி ஊரின் திருவிழா

கல்வி ஊரின் திருவிழா

சுட்டெரிக்கும் சூரியனின் சுடர்களுக்கு மத்தியிலும் காலை மாலை வேலையென
சக்கரமாக சுழன்று கொண்டு இருக்கும் எமக்கு
களியூட்டுவதற்காகவும் சிறு இளைப்பாறுதாலுக்காகவும்
ஒரு திருவிழா ஐீலை 16ல்  காத்திருக்கின்றது. 
அனைவரும் ஒன்று சேருவோம்.

மைதான கிணற்றிலும், வீட்டு திண்ணைகளிலும், அரசமர நிழலும்
கூடி கதை பேசி மகிழ்ந்த நாம் மேப்பிள் மரத்தின் கீழ் அமர்ந்து
மீண்டும் பழைய நினைவுகளை மீட்போம் வாரீர்.

உண்ண உணவும் உண்டு. உறவாட உறவுகளும் உண்டு. 
எம் செல்ல குழந்தைகள் துள்ளி விளையாட
பல்வகை விளையாட்டுக்கள் உண்டு. 
நம் முதியோருக்கும் பல விளையாட்டுக்களும்
காத்திருக்கின்றன. 

பெற்றோருக்கு ஓரு தாய் மண். பிள்ளைகளுக்கோ
இன்னொரு தாய் மண் என்று வாழும் இந்நாட்டில்
நம் பிள்ளைகளுக்கு ஊரையும் உறவையும் அறிமுகபடுத்துவோம்.
அழைத்து வாருங்கள் அடுத்த சந்ததியினாருக்கு
நம் இனத்தின் பெருமைகளை எடுத்துரைப்போம். 

தயக்கம் என்ன இளையோரோ?
எம் கருத்து இங்கு எற்றுக் கொள்ளப்படுமா என்ற தயக்கமா? 
வந்து பாருங்கள்.  உம்மை தட்டிக் கொடுக்க எத்தனை கரங்கள்.
எம் மூத்தோர் எம் ஊரையையும் எமது கலாச்சாரத்தையும்
கட்டிக் காக்க பட்ட அல்லல்கள் போதும்.இனியாவது
இளையோர்  நாம் கை கொடுப்போம் வாரீர்.
புறப்பட்டு வாரீர் நண்பர்களே!
ஊர் மக்களுடன் ஒன்றாக கூடி களித்திருப்போம் வாரீர்.

Friday, July 8, 2011

கல்வியங்காட்டு ஒன்றுகூடல்


கல்வியங்காட்டு மக்களின்
ஒன்றுகூடல்
கனடா மண்ணில் புதுப்பொலிவுடன்
ஆடி மாதம் 16ந் திகதி
அசைந்துவருகுது வாருங்கள்
எம்மூர்மக்களே
ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம்
ஆடி16ல் அனைவரும் ஒரேதிடலில்
கூடி நின்று
கும்மியடித்து கொண்டாடுவோம்
வாருங்கள் வாருங்கள்
எம்மண்ணின் வாசனையை
மனதில் நிறுத்துவோம்

                   மண்ணின்மைந்தன்
                               மதி